திருவட்டாரை அடுத்த பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்மைல்தாஸ். இவர் அந்த பகுதியில் ஒலி ஒளி அமைப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மதியம் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். அவரில் ஒருவர் தலையில் ஹெல்மட் டுடன் கடைக்குள் புகுந்தார். பின்னர் அங்கிருந்த ஆம்பிளிபயர் ஒன்றை திருடி சென்றுள்ளார்.
ஸ்மைல்தாஸ் கடைக்கு வந்து பார்த்த போது, ஆம்பிளிபயர் மாயமானதை கண்டு, அங்குள்ள சி சிடி வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது மர்ம நபர் ஆம்பிளிபயரை தூக்கி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து ஸ்மைல்தாஸ் திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இன்று (10-ம் தேதி) காலையில் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.