கனிமவள லாரி மோதி தொழிலாளி படுகாயம்

3653பார்த்தது
கனிமவள லாரி மோதி தொழிலாளி படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்( 50 ) , இவர் இன்று தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் குழித்துறை பகுதியில் சாலை ஓரத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வேகமாக வந்த கனிம வள லாறி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் ரமேஷ் சென்ற இருசக்கர வாகனத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இருசக்கர வாகனம் டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் அங்கு கூடியதை பார்த்ததும் கனிம வள லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போலீசார் அந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து களியக்காளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எமனாக மாறிவரும் கனிமவள லாரிகளால் பொதுமக்கள் பயத்துடனும் பீதியுடனும் சாலையில் நடமாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி