குமரி மாவட்ட கலெக்டர் தகவல்.

77பார்த்தது
குமரி மாவட்ட கலெக்டர் தகவல்.
தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் பயன்பாடு குறித்து குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில்: -தமிழநாட்டில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கின்ற வகையில் "நான் முதல்வன்" என்கின்ற முதல்-அமைச்சரின் திட்டத்தின் மூலம் 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி, செயல்படுத்திய நாளில் இருந்து குமரி மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவிகளில் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 22, 798 பேர் பயன் பெற்றுள்ளனர். இதேபோல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 27, 795 மாணவர்களும், தொழில் நுட்ப கல்லூரிகளில் பயிலும் 6, 725 மாணவர்களும் என மொத்தம் 57 ஆயிரத்து 318 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :