நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 39). இவர் அங்குள்ள ஒரு கூரியர் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் (நவ.,9) பணி நிமித்தமாக நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகே நடந்து சென்ற போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே முத்துகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.