திருவட்டார்: சேதமடைந்த பாலம் தற்காலிக சீரமைப்பு

85பார்த்தது
திருவட்டார் அருகே அயந்தி என்ற பகுதியில் கோதையார் இடதுகரை சானலின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்க்காக ஒரு இரும்பு பாலம் ஒன்று உள்ளது. இந்த இரும்பு பாலம்  சேதமடைந்து பல வருடங்கள் ஆகிறது.
      இந்த பாலத்தில் நடந்து வந்த வயதான மூதாட்டி பாலத்தில் சேதமடைந்த தகடின் ஓட்டை வழியே கால் முழுவதும் உள்ளே சென்றது.   அதுபோல் 17-11-2024 அன்று இந்த பாலத்தில்  நடந்து சென்ற  5 வயது சிறுவன் இந்த ஓட்டையின் உள்ளே கால் சென்று உடல் முழுவதும் உள்ளே சென்று தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிகொண்டிருந்தான் 

  பொதுமக்கள் உதவியால் உடனே அந்த சிறுவன் காப்பாற்றபட்டான். இது சம்மந்தமான செய்தி நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிலையில் நேற்று (20-ம் தேதி) அவசரமாக பாலம் ஓட்டைகளில் தற்காலிக சீரமைப்பு பணி நடந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி