காக்கவிளையில் நியாயவிலை கடை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

61பார்த்தது
காக்கவிளையில் நியாயவிலை கடை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல் பகுதியில் நியாயவிலை கடையில் காக்கவிளை, காட்டுக்கடை, தெழிச்சல் பகுதிகளில்  உள்ள மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே காக்கவிளை பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று காக்கவிளை பகுதியில்   சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து கட்டிடம்  அமைக்க 6 - லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் அமைக்கப்பட்டது இந்த கட்டிடத்தை இன்று (15-ம் தேதி) திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி முதல் விற்பனையை எம்.எல்.ஏ துவக்கி  வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகர், கருங்கல் கூட்டுறவு சங்க தலைவர் டைட்டஸ், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், சிங், கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் ஷோபா மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி