இரவிபுத்தன் துறை கிராமத்தில் சுவர் அமைப்பதில் பிரச்சனை

78பார்த்தது
நித்திரவிளை அருகே  சின்னத்துரை மீனவர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜோபி (27). இவரது வீட்டின் முன் பகுதியில் இரவிபுத்தன் துறை மீனவ மக்களின் ஓய்வு அறை கட்ட அஸ்திவாரம் போட்டு ஒரு பக்க சுவர்  கட்டப்பட்டுள்ளது. இதை இடித்த அகற்ற வேண்டும் என ஜோபி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம்  கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது.

      கடந்த ஏப்ரல் மாதம் இடித்து அகற்ற வந்த அரசு அதிகாரிகள் சர்வே எண் மாறியதால்  இடிக்காமல் போய்விட்டனர். இதைத்தொடர்ந்து பங்கு பேரவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது.   அப்போது நீதிமன்றம் இடிக்கும் உத்தரவை நிறுத்தி வைத்தது.

   இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய  இடத்தில் நேற்று சுற்றுச்சுவர்  அமைக்கும் பணி துவங்கியது. உடன் சின்ன துறை சேர்ந்த ஜோபி குடும்பத்தினர் சுற்றுச்சுவர்  அமைத்தால் எங்கள் வீட்டிற்கு செல்ல பாதை இல்லாமல் ஆகும் என பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் இருதரப்பினரும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்தை சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். குளச்சல் ஏ எஸ் பி  பிரவீன் கௌதம் இரு தரப்பினரையும்  எச்சரித்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்.

தொடர்புடைய செய்தி