கொத்தனார் மீது தாக்குதல் சகோதரர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு

59பார்த்தது
கொத்தனார் மீது தாக்குதல் சகோதரர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே வழிப்பாதை பிரச்சனை சம்மந்தமாக நடந்த மோதலில் உடன் பிறந்த  சகோதரர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.  

     புதுக்கடை அருகே பிலாப்பள்ளி விளையை சேர்ந்தவர் ராஜைய்யன் மகன் ஜஸ்டின் குமார் (40). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உடன் பிறந்த சகோதரர்களான சுனில் (34), சதீஷ்குமார் (44) ஆகியோர்களுக்குமிடையே வழிப் பாதை சம்மந்தமான  பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  

      இந்த நிலையில் சம்பவதினம் ஜஸ்டின் குமார் வீட்டு காம்பவுண்ட்டுக்குள் அத்துமீறி  புகுந்த சுனில், சதீஷ்குமார், சோபியா (38), சாலினி (29) ஆகியோர் சேர்ந்து ஜஸ்டின் குமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  

      இதில் காயமடைந்த ஜஸ்டின் குமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் சம்மந்தபட்ட சுனில், சதீஷ்குமார், சோபியா, சாலினி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி