மாதவலாயம் அருகே வாலிபர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு.

563பார்த்தது
மாதவலாயம் அருகே வாலிபர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு.
மாதவலாயம் ஊராட்சிக்குட்பட்ட புளியன்விளை புதுகாலனியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 18). இவர் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10. 30 மணிக்கு சுபாஷ், நண்பர்களான சினிவாசன் (23), அபி (22) ஆகியோர் மாதவலாயத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது கைகாட்டி பகுதியில் வந்தபோது மாதவலாயத்தை சேர்ந்த முஜாய்த், ஜாகிர்ஷா, ஷாலித் சமில்சாஹிம் ஆகியோர் சுபாஷ் உட்பட 3 பேரையும் தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுபாஷ், சீனிவாசன், அபி ஆகியோர் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுபாஷ் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் முஜாய்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு - செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி