உத்திரமேரூர் இலவச தையல் பயிற்சி துவக்க விழா.

68பார்த்தது
மத்திய அரசு மக்கள் கல்வி நிறுவனம் உதவியுடன் தையல் பயிற்சி துவக்க விழா மற்றும் தையல் பயிற்சி , ஆரி ஒர்க் மற்றும் அழகு கலை பயின்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் பாரத் பெட்ரோலியம் எதிரே மைக்ரோ ஸ்மால் என்டர்பிரைசஸ் என்ற மத்திய அரசின் அங்கிகாரம் பெற்ற நிறுவனம், தேவ் அழகு கலை பயிற்சி நிறுவனம் மற்றும் மறுமலர்ச்சி கல்வியியல் அறக்கட்டளை, இனைந்து இலவச தையல், ஆரி ஒர்க் மற்றும் அழகு கலை பயிற்சி நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் கட்ட பயிற்சி முடித்த 50 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும், இரண்டாம் கட்ட இலவச பயிற்சி துவக்க விழாவும் நடைபெற்றது.

இந்த இரண்டாம் கட்ட பயிற்சி துவக்க விழாவை மகளிர் திட்ட உத்திரமேரூர் மேலாளர் நித்தியானந்தம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பயிற்சி முடித்த பெண்களுக்கு மறுமலர்ச்சி கல்வியியல் அறக்கட்டளை நிறுவனர்
லயன். ப. முத்துக்குமார் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் தேவ் அழகு கலை பயிற்சி நிறுவன இயக்குனர் ராஜ்குமார், பயிற்சியாளர் விஜயலட்சுமி, மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் ரத்தினமாலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.