உடல் உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சார் ஆட்சியர் அஞ்சலி
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் சன்னதி தெருவில் வசித்து வந்த
கல்யாணராமன் (75) இவருக்கு கடந்த வெள்ளியன்று மாரடைப்பு ஏற்பட்டு பெத்தேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, தான் இறந்தால் தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும் என கல்யாராமன் தெரிவித்திருந்த நிலையில். அவரின் சிறுநீரகங்கள் இரண்டும் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, மறைந்த கல்யாணராமன் அவரின் பூத உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் சார் ஆட்சியர் நாராயண சர்மா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் மறைமலை நகர் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். உடன் துணை வட்டாச்சியர் சாமி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.