காஞ்சிபுரம் அறம்வளர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, கடந்த 2ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது.
விழாவையொட்டி, தினமும் காலை, மாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை தினமும் திருப்புகழ் பாராயணம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 8: 00 மணிக்கு வீரவாகு காப்பு கட்டும் நிகழ்வும், தொடர்ந்து வீதியுலாவும், இரவு சூரர்படை மற்றும் முருகப்பெருமான் வீதியுலாவும், வீரவாகு துாதும், சூரசம்ஹாரமும் நடந்தது.
நேற்று மாலை 6: 00 மணிக்கு சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணமும், இரவு 7: 00 மணிக்கு திருமண விருந்தும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தது.
பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார பழநி ஆண்டவர் கோவிலில், கடந்த 1ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. மூன்றாம் நாளான கடந்த 3ம் தேதி அமரேஸ்வரர் கோவிலில் இருந்து, 108 பால்குட வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் காலை 8: 00 மணியளவில், அரசு காத்த அம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் பெறும் நிகழ்வும், இரவு வீரவாகு துாதும், சூரசம்ஹாரமும் நடந்தது.
நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், மாலை தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.