கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு

85பார்த்தது
மதுராந்தகம் அருகே தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அப்பகுதியில் இயங்கும் கல்குவாரியை மூடக்கோரி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.

கல்வாரிகள் வெடிக்கும் விடியால் வீடுகள் விரிசல் ஏற்படுவதாகும் இரவு பகல் பாராமல் லாரிகளில் கனரக வாகனங்கள் கற்களை ஏற்றி செல்வதாகவும் இதனால் இந்த கிராமம் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகும் அதனால் இந்த கல்குவாரியை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளிடம்
பலமுறை மனு அளித்தோம். எந்த ஒரு நடவடிக்கைட் எடுக்கவில்லை எனக் கூறி இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து கிராம நுழைவாயில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி ஓட்டு போட போக மாட்டோம் கல் குவாரியில் மூட வேண்டும் என கோஷமிட்டு தேர்தலை புறக்கணித்து வருகின்றன.