"கடலில் குப்பை குவியல் செங்கை மீனவர்கள் கவலை

71பார்த்தது
"கடலில் குப்பை குவியல் செங்கை மீனவர்கள் கவலை
மாமல்லபுரம் பகுதி கடலில், மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை அதிகரித்துள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:

மழைக்காலத்தில், பாலாறு, பகிங்ஹாம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுக்கும். ஏரிகள் நிரம்பினால், உபரிநீர் கால்வாய்களில் பாய்ந்து, கடலில் கலக்கும்.

'மிக்ஜாம்' புயல் காரணமாக, ஜன. , 4ம் தேதி, பாலாறு, பகிங்ஹாம் கால்வாயில் பெருக்கெடுத்த வெள்ளம், கடலில் பாய்ந்ததால், பல இடங்களில் இருந்தும் அடித்துவரப்பட்ட குப்பை, கடலில் அதிக அளவு சேர்ந்தது.

இதனால், மீன்பிடிக்க செல்லும்போது, படகிலும், வலையிலும் குப்பை சிக்கி அவதிக்குள்ளாகிறோம். குப்பை கடலுக்கு வராமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். "

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you