தேர்வு எழுத சென்ற கல்லுாரி மாணவி மாயம்

72பார்த்தது
தேர்வு எழுத சென்ற கல்லுாரி மாணவி மாயம்
காஞ்சிபுரம் மாவட்டம்
வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி, காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் உள்ள கிருஷ்ணா கலை கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், டி. என். பி. எஸ். சி. , தேர்வு எழுதுவதற்காக காஞ்சிபுரம் சென்ற அந்த மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி