பைக்கில் இருந்து விழுந்த இளம் பெண் பலி

61பார்த்தது
பைக்கில் இருந்து விழுந்த இளம் பெண் பலி
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை, 24; சுங்குவார்சத்திரத்தில் தங்கி, ஸ்ரீபெரும்பதுாரில் உள்ள மொபைல் போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை பாடியைச் சேர்ந்த முனுசாமி, 23, என்பவருடன் 'யமாஹா' பைக்கில் சென்று, நேற்று அதிகாலை மீண்டும் சுங்குவார்சத்திரம் திரும்பினர்.

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வடமங்கலம் அருகே வந்த போது, நிலை தடுமாறி இருவரும் விழுந்தனர்.

இதில், மணிமேகலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முனுசாமிக்கு லேசான காயம் அடைந்தார். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மணிமேகலை, உயிரிழந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி