மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

65பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொடர் விடுமுறை காரணத்தால் போக்குவரத்து நெரிசல் பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிந்து 10 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களான வெண்ணை உருண்டைக் கல், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், உள்ளிட்ட புராதன சின்னங்களை காண சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மாமல்லபுரம் விழாக்கோலம் கொண்டுள்ளது. இன்று ஒரே நாளில் வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்துள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் செல்லும் பிரதான சாலை போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லாததே போக்குவரத்திற்கு காரணம் எனவும் அதற்கு உரிய இடத்தை ஒதுக்கீடு செய்து சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கை வைத்துள்ளனர். போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் சுற்றுலா பயணிகளை ஒழுங்குப்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கவும் போக்குவரத்து மற்றும் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் மாமல்லபுரமே விழாக்கோலம் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி