"வேன் மோதி பில்டர் பலி

85பார்த்தது
"வேன் மோதி பில்டர் பலி
சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 35; கட்டட பொறியாளர். நேற்று காலை, அகரம்தென் - தாம்பரம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த 'டெம்போ டிராவலர்' வாகனம் மோதியதில் தலையில் படுகாயமடைந்த சதீஷ், அதே இடத்திலே இறந்தார். போலீசார் விரைந்து உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், நடந்து செல்வது தெரியாமல் சதீஷ் மீது வேன் மோதியதாக, ஓட்டுனர் குழந்தைசாமி, 25, கூறியுள்ளார். அவரை, போலீசார் கைது செய்தனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி