இலவச டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

61பார்த்தது
செய்யூர் அருகே இலவச டிராக்டர் வழங்கியபோது கண்கலங்கிய விவசாயின் கண் துடைத்து கட்டி அணைத்து தழுவிய நடிகர் ராகவா லாரன்ஸ்


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த ஆக்கனாம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பரமசிவம் இவர் தன்னுடைய கஷ்டத்தை கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

இந்த வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் நடத்திவரும் மாற்றம் அறக்கட்டளை சார்பாக விவசாயிக்கு அவர் உதவி செய்ய இன்று விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை ஒன்றை அவர் கிராமத்திற்கு சென்று விவசாயிக்கு நேரடியாக வழங்கினார்

நடிகர் ராகவா லாரன்ஸ் வாகனத்தில் வரும் பொழுது இளைஞர்கள் ஒன்று கூடி பேண்ட் வாத்தியுடன் நடனமாடி உற்சாகத்துடன் வரவேற்றனர்

விவசாயி பரமசிவம் அவருக்கு டிராக்டர் சாவியை வழங்கும்பொழுது தன்னறியாமல் கண் கலங்கினார் அப்பொழுது நடிகர் லாரன்ஸ் கண்ணீரை துடைத்து விட்டு கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்

பின்பு விவசாயி குடிசை வீட்டுக்கு சென்று குடும்பத்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்புடைய செய்தி