திம்மசமுத்திரத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

83பார்த்தது
திம்மசமுத்திரத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் அடுத்த, வெள்ளைகேட் மேம்பால சர்வீஸ் சாலையில் இருந்து, திம்மசமுத்திரம் கிராமத்திற்கு, பாலாஜி நகர் வழியாக செல்லும் சாலையில், மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயின் குறுக்கே புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.

பாலம் அமைந்துள்ள பகுதியில், புதிதாக சாலை அமைக்க ஜல்லிக் கற்கள் சாலையில் கொட்டப்பட்டு பரப்பி விடப்பட்டது. அடுத்த கட்ட பணியை துவக்காமல் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன.

எனவே, திம்மசமுத்திரம் பாலாஜி நகரில், சிறுபாலம் அமைந்துள்ள பகுதியில், கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணியை முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி