நீதிபதி தேர்வில் வெற்றி அடைந்த சாதனை படைத்துள்ளார் தமிழ்நாடு கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக இந்திய அளவில் திகழ்ந்து வருகிறது.
மதுராந்தகம் அடுத்த வெண்மாலகரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார்.
நாகப்பனின் மனைவி மங்க வாரம் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 5 மகன்கள் , 1 மகள் உள்ளனர். இவர்களின் ஐந்தாவது மகன் பிரகாஷ். இவர் கடந்த 2014 - 19 ஆண்டு சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பி ஏ பி எல் பட்டப் படிப்பினை படித்து முடித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நிலை தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்த நிலையில் மீண்டும் நவம்பர் மாதம் நடைபெற்ற, முதன்மைத் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் நடைபெற்ற நேர்காணலிலும் தேர்ச்சி அடைந்து சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.