பறவைகளுக்காக வெடி வெடிக்காமல் வேட்பாளருக்கு வரவேற்பு

81பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ராஜசேகர் அனல் பறக்கும் தீவிர சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியத்தில் அடங்கிய காட்டுப்பாக்கம் வெங்கப்பாக்கம் புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய அவை தலைவர் ரகு ரெட்டியார் ஏற்பாட்டில் அப்பகுதி முழுவதும் விவசாய பூமியாகவும் பறவைகள் அதிகம் இருந்ததால் வெடி சத்தம் இல்லாமல் வேட்பாளரை சால்வை அணிவித்து வரவேற்றார் அப்பகுதி மக்களிடையே இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் படி வேட்பாளர் ராஜசேகர் கேட்டுக்கொண்டார் வேட்பாளருக்கு பெண்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் தொடர்ந்து புதுப்பட்டினம் பகுதியில் மாவட்ட அவைத் தலைவர் எம் தனபால் ஏற்பாட்டில் இருசக்கர வாகனங்கள் புடை சூழ திரளான பெண்கள் பங்கேற்று மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர் அப்போது பேசிய வேட்பாளர் ராஜசேகர் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் மக்களாகிய உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் எனவும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பில் வெளி மாநிலத்தவர் நுழைவதை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் உங்களுக்கான குரலாய் ஒலிப்பேன் என உறுதி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி