காஞ்சியில் பாமக சாலை மறியல்

1060பார்த்தது
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பெரிய தெரு முனை பகுதியில் பாமக பிரமுகர் ஜவகர் என்பவர் கடை அருகே திமுக புதிய கொடிக்கம்பம் நடுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த போது அதனை ஜவகர் தடுத்து நிறுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகள் இருப்பதாக கூறியதும் திமுகவினர் திரும்பி சென்றனர். இந்நிலையில் நேற்று 11 மணியளவில் அப்பகுதியில் அருள்மணி என்பவருடன் பத்துக்கும் மேற்பட்டோர் வந்து கொடி கம்பம் பதிய வைத்துள்ளனர். இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த ஜவகர் மற்றும் அருள்மணி இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் ஜவகர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற போது தடுத்த போது எதிர் தரப்பினர் பலரின் மேல் பெட்ரோல் பட்டதாகவும், இதனால் தங்களை தாக்க வந்ததாக கூறி திமுகவினரும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாகவும் தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக பிரமுகர் ஜவகர் காஞ்சி தாலுகா காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இத்தகவலை அறிந்த பாமகவினர் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.