சிறிய அளவிலான  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

84பார்த்தது
சிறிய அளவிலான  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெற்ற 167 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


இவ்வேலைவாய்ப்பு முகாமில்  63 வேலையளிக்கும் நிறுவனங்கள், 3 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டன.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்,  மாவட்ட ஆட்சியர் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.   வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெற்றவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 898 ஆண் வேலைநாடுநர்களும் 559 பெண் வேலைநாடுநர்களும்  மொத்தம் 1457  வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.  

இம்முகாமில் கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்களுக்கு  167 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. அதில்  92 ஆண்கள் மற்றும் 75  பெண்கள் ஆவர். திறன்பயிற்சிக்காக விருப்பம் தெரிவித்த 12 நபர்களுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வில் 443 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வேலைவாய்ப்பு முகாமில்,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேல், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி