மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம்

50பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன

குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 70 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்ட வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூலிக்கப்பட்டு வருகிறது

அதில் பல்வேறு சுங்க சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பு கூட தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது

குறிப்பாக செங்கல்பட்டு பரனு சுங்க சாவடி கடந்த 2019 ஆம் ஆண்டு காலவதியான நிலையில் தற்போது வரை கட்டண வசூலை தொடர்ந்து செய்து வருகின்றன

மேலும் இது போன்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காலாவதியான சுங்க சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில்

அவற்றை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செங்கல்பட்டு அருகே சுங்க சாவடி முற்றுகையிடும் போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாருல்லா தலைமையில் நடைபெற்று வருகிறது

அப்பொழுது திடீரென மனிதநேய மக்கள் கட்சியினர் சிலர் சுங்க சாவடி வழியாக செல்லும் வாகனங்களை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்

உடனடியாக அங்கிருந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் மக்கள் நேய மனித கட்சி நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது


மேலும் சுங்க சாவடி பூத் கண்ணாடிகளை கட்சி நிர்வாகிகள் சரமாரியாக அடித்து தாக்கி உடைத்துள்ளனர்.

டேக்ஸ் :