சென்னையிலிருந்து குவைத் நேரடி விமான சேவை

53பார்த்தது
சென்னை- குவைத்- சென்னை இடையே நேரடி, கூடுதல் விமான சேவைகள், இன்று முதல் தொடங்குகிறது.

இதுவரையில் 4 விமான நிறுவனங்கள், சென்னை- குவைத் இடையே, நேரடி விமான சேவைகளை இயக்கி வந்த நிலையில், இப்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், கூடுதலாக குவைத்துக்கு விமான சேவைகளை தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து குவைத்துக்கு இதுவரை, ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்லைன்ஸ், ஜாகீரா ஏர்லைன்ஸ் ஆகிய, 4 விமான நிறுவனங்கள், சென்னை- குவைத்- சென்னை இடையே நேரடி பயணிகள் விமான சேவைகளை இயக்கி வந்தன. இந்த நான்கு விமானங்களிலுமே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், இன்று முதல் சென்னை- குவைத்- சென்னை இடையே, புதிய பயணிகள் விமான சேவையை தொடங்கியுள்ளது.

இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வாரத்தில் 5 நாட்கள், செவ்வாய், சனிக்கிழமை தவிர, மாலை 6: 50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு குவைத்திற்கு செல்கிறது. அந்த விமானம் மீண்டும் குவைத்தில் இருந்து, அதிகாலையில் புறப்பட்டு, காலை 6: 35 மணிக்கு சென்னைக்கு வந்து சேர்கிறது. இப்போது இந்த விமானம் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி விமானமாக விரைவில் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி