கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்

63பார்த்தது
கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக சிவி சண்முகம், விஜய பாஸ்கர் ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு இன்று (ஜூன் 20) வருகை தந்து கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை நலம் விசாரித்தார்.