
உளுந்துார்பேட்டை: போதை விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி
உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை சார்பில், தெருக்கூத்து கலைஞர்களின் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் செய்திருந்தனர்.