
உளுந்தூர்பேட்டை: எஸ்பியிடம் பதக்கம் பெற்ற காவலர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டவிதி ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு காவலர் மதுரை வீரன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மதிப்புமிக்க உத்கிருஷ்ட் சேவா பதக்கம் மாவட்ட எஸ்பியிடம் வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற்றார். உத்கிருஷ்ட் சேவா பதக்கம் என்பது தேசத்திற்கு அசாதாரண சேவை செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் பதக்கமாகும்.