சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் திங்கள் கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதற்காக அரசின் மூலம் வார சந்தை கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அது முறையாக பராமரிக்கப்படாததால் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் நாரச்சந்தையை பயன்படுத்தாமல் சாலை ஓரங்களில் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி வாரச்சந்தையை தூய்மைப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.