அமைச்சர் வீட்டில் 3-வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு

364பார்த்தது
அமைச்சர் வீட்டில் 3-வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு
திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 3-ம் தேதி காலை சோதனை தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தை கடந்து சோதனை நீடித்து வருகிறது. ஏற்கெனவே திமுக முன்னணியினர் வீடுகளில் IT சோதனை நடைபெற்றிருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.