ஐபிஎல் - 20 ஓவரில் 272 ரன்கள் குவித்த கொல்கத்தா

71பார்த்தது
ஐபிஎல் - 20 ஓவரில் 272 ரன்கள் குவித்த கொல்கத்தா
ஐபிஎல் இன்றைய(ஏப்ரல் 3) போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 272 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பிலிப் சால்ட் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க நரைன் அதிரடியாக விளையாடினார். 21 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார் சுனில் நரைன். இவருடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் (18) அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இவர்களது விக்கெட்டுக்கு பிறகு ஆண்ட்ரே ரஸல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 8 பந்துகளில் ரிங்கு சிங் 26 ரன்கள் அடித்தார். டெல்லிக்கு வெற்றி இலக்காக 273 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி