தேர்தலில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

74பார்த்தது
தேர்தலில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
மக்களவைத் தேர்தலில் புதிய தொழில்நுட்பமான cVigil App பயன்படுத்த போகிறோம் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக அநடைபெறுகிறது. இந்நிலையில் சிவிஜில் செயலி மூலம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 27 செயலிகள் உள்ளன. KYC app மூலம் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை அறியலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் இருக்கும். 1905 - என்ற எண் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.