இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

2145பார்த்தது
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
ஒருநாள் உலக கோப்பையின் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. மேற்கு வங்கத்தில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, நீண்ட நாட்களாக அபார ஸ்கோரை பதிவு செய்து வரும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இரண்டு அணிகளும் சம பலத்தில் உள்ளதாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.