தொடர் மழை: சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

62பார்த்தது
தொடர் மழை: சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் சேலம் மாவட்டம் அன்னதானபட்டியில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மது என்பவர் நேற்று(மே 22) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், சுவர் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி