பிரஜ்வால் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட்டது நான்தான்

52பார்த்தது
பிரஜ்வால் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட்டது நான்தான்
முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா கர்நாடகாவில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டார். அவர் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகவும், அதுகுறித்த காணொளிகள் வெளியாகியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பித்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கார்த்திக், பிரஜ்வாலின் பாலியல் வன்முறை விடியோக்களை வெளியிட்டது நான்தான் என்று தெரிவித்துள்ளார்.