காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய பிறகு கணவர் தற்கொலை

85பார்த்தது
காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய பிறகு கணவர் தற்கொலை
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் (23). இவர் முத்துராக்கு என்பவரை காதலித்து திருமணம் செய்தார். மனைவி கருவுற்ற நிலையில் வளைகாப்பு நடத்தப்பட்டது. இதனிடையே நேற்று (நவ., 16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். போலீஸ் விசாரணையில், பனியன் கம்பெனி நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க வீட்டை விற்பதற்கு முயற்சித்துள்ளார். தாய்க்கும், முத்துக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டதால் தற்கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி