திருச்சியில் கோர விபத்து - 4 பேர் பலி

51230பார்த்தது
திருச்சியில் கோர விபத்து - 4 பேர் பலி
திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில் நகர் காந்திஜி குறுக்கு தெருவில் ஆட்டோ ஓட்டுநர் மாரி என்பவரின் வீடு இடிந்து விழுந்து 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நால்வரின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.