வீட்டு மருத்துவம்!

888பார்த்தது
வீட்டு மருத்துவம்!
✦ தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
✦ வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.
✦ வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.
✦ மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.
✦ கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
✦ இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.
✦ தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.
✦ இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.