13 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை

1280பார்த்தது
13 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலைக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி