தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

11259பார்த்தது
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது.
இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்று (மே 26) இயல்பையொட்டியும், நாளை (மே 27) முதல் வரும் 29ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வெப்பம் இயல்பைவிட அதிகரித்தும் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி