பாமக தலைவர் அன்புமணிக்கு நடிகர்
விஜய் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு
அரசியல் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர்
விஜய் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'லியோ' படத்தின் நான் ரெடி பாடலில்
விஜய் சிகரெட் பிடித்ததற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக
விஜய் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.