பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இந்து அமைப்பினர் ஒன்றுகூடி விநாயகர் சிலை அமைத்தனர். அப்போது, அங்கு வந்த போலீசார் சிலை வைக்க மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை அமைப்பதாக கூறி இந்து அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், நிபந்தனைகளுடன் சிலை வைக்க போலீசார் அனுமதித்துள்ளனர்.