தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷுக்கும், அவரது மனைவி பாடகி சைந்தவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்களது விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.