ராணுவ மற்றும் கடற்படைத் தலைவர்களான நண்பர்கள்

82பார்த்தது
ராணுவ மற்றும் கடற்படைத் தலைவர்களான நண்பர்கள்
இந்திய ராணுவத்தில் ஒரு வரலாற்று தருணம் அரங்கேறியுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக நண்பர்கள் ராணுவம் மற்றும் கடற்படைத் தலைவர்கள் பொறுப்புக்கு வந்துள்ளனர். கடற்படைத் தளபதியாக அட்மிரல் தினேஷ் திரிபாதி கடந்த மே 1ஆம் தேதி பொறுப்பேற்றார். ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி விரைவில் பதவியேற்க உள்ளார். இருவரும் பள்ளி அளவில் இருந்தே நண்பர்கள். ராணுவத்தில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, உயர்ந்த பதவிகளை எட்டியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி