விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் விதத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகம் மற்றும் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ‘ஒலிம்பிக் அகாடமி கட்டடம்’ கட்டும் பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் விடுதிகளில் தங்கி பயிலும் வீரர் வீராங்கனைகளுக்கு ‘சாம்பியன்ஸ் கிட்’என்கிற வீரர்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பினை வழங்கினார்.