முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் காலமானார்

558பார்த்தது
முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் காலமானார்
செங்கல்பட்டை சேர்ந்த இ.ராமகிருஷ்ணன்,1989இல் திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர். பின் கட்சி மாறிய அவர் 1991இல் அதே அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1991 முதல் 1995 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து, அதிமுகவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ராமகிருஷ்ணன் (76) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி