மத்திய பிரதேச தலைமைச் செயலகத்தில் தீ விபத்து

77பார்த்தது
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் பல அடி உயரங்களுக்கு கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்னனர். பல முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.