விருதுநகர், ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.