ஊராட்சிகளை நகராட்சிகளுடன் சேர்க்காமல் அனுமதிக்க வேண்டும்

64பார்த்தது
ஊராட்சிகளை நகராட்சிகளுடன் சேர்க்காமல் அனுமதிக்க வேண்டும்
ஈரோடு மாவட்டம் - பவானிசாகர் சட்டசபை - தொகுதிக்குட்பட்ட புன் - செய்புளியம்பட்டி நகராட்சியுடன், பவானிசாகர்
ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், நல்லூர் ஆகிய ஊராட்சி பகுதிகளையும், சத்தியமங்கலம் நகராட்சியுடன், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியையும் சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டு முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பின் தங்கிய ஏழை எளிய மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

மேற்கண்ட இந்த ஊராட்சி பகுதிகளை நகராட்சிகளுடன் சேர்த்தால் பொதுமக்களின் வாழ்வதாரம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் சொத்து வரி, குடிநீர் வரி, வீடு கட்டுமான வரைபட அனுமதி உளளிட்ட வரிகளால் பொது மக்கள் பாதிக்கப்படுவர். இப்பகுதியில் தொழிற்சா லைகள் ஏதும் இல்லாததால் மானாவாரி விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
மேற்கண்ட வஊராட்சி களை நகராட்சிகளுடன் சேர்க்காமல் ஏற்கனவே செயல்பட்ட ஊராட்சிகளாக தன்னிச்சையாக செயல்பட ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.